கொரோனாவினால் நேற்று (20) இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான ஆண் ஆவார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (19) அவர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் திஹாரியவைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவராவார். கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.