Sun, May9, 2021
Homeதலைப்பு செய்திகிளிநொச்சியில் போலி நாணயத்தாள்கள்; விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்கள்; விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சி, சாந்தபுரம் கிராமத்தில் நேற்று (03) மாலை 5  மணியளவில் கைப்பற்றப்பட்ட 8 இலட்சத்து 15,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரும்,பொலிஸ் விசேட பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, சாந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றை சோதனையிட போதே, மேற்படி போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 3 பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர் ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்கள் தொடர்பிலும் பொலிஸாரும், பொலிஸ் விசேட பிரிவினரும் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த  போலி நாணயத்தாள்கள் புழக்கத்துக்குச் சென்றுள்ளனவா என்பது
தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi