Mon, Apr19, 2021
Homeசெய்திகள்வடக்குகிளிநொச்சியில் கோர விபத்து; மயிரிழையில் தப்பிய உயிர்கள்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

கிளிநொச்சியில் கோர விபத்து; மயிரிழையில் தப்பிய உயிர்கள்

கிளிநொச்சி வலய கல்விப் பணிமனைக்கு முன்பாக பாரிய விபத்து சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என கூறப்படுகின்றது.

கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன.

வீதியில் பயணித்த கார் வீதியை குறுக்கிட்டு கடக்க முற்பட்டபோது காரின் பின்னால் பயணித்த மற்றுமொரு ரிப்பர் வாகனத்தை முந்தி சென்ற ரிப்பர் வாகனம் கார் வீதியை கடக்க முற்படுவதை அவதானிக்காமல் காருடன் மோதியுள்ளது.

இதன்போது கார் பாரிய அளவில் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கார் வீதி ஓரத்தில் இருந்த வாகன ரயருடன் மோதி நின்றுள்ளது.

குறித்த ரயர் இல்லாத சந்தர்ப்பத்தில் மரத்துடன் மோதி பாரிய விபத்தில் சிக்கியிருக்ககூடும் என சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் வாகனங்கள் பாரிய சேதமடைந்துள்ளதுடன், எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் தெய்வாதீனமாக ஏற்பட்டிருக்கவில்லை.

மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.