Sun, May9, 2021
Homeவிநோதம்கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த கண்கள்…. அதிர்ந்த தம்பதி!

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த கண்கள்…. அதிர்ந்த தம்பதி!

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த கணவன் மனைவி இருவர், தங்களின் குளியலறையில் கழிவுநீர் வெளியேறாமல் அடிக்கடி தேங்கிய காரணத்தை ஆராய்ந்துள்ளனர்.

தொடக்கத்தில் சிறு அடைப்பு காரணமாக இவ்வாறு நிகழ்கிறது என அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால், இது வாடிக்கையாக நிகழவே காரணத்தை அறிய பிளம்பரை அழைத்துள்ளனர்.

அவரும் ஆராய்ந்து பார்த்துவிட்டு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளார். அதன் பின்னர் கழிவு நீர் செல்லக்கூடிய துவாரத்தை பார்த்துள்ளனர். அதில் இரண்டு கண்கள் பளீச்சென தெரியவே அவர்கள் அதிர்ந்துள்ளனர்.

 

அதை திறந்து பார்த்தபொழுது 2 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு அதில் இருந்துள்ளது. அதனாலேயே கழிவுநீர் சரியாக வெளியேறாமல் இருந்துள்ளது என தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் தக்க உதவியுடன் அதை லாவகமாக வெளியே எடுத்துள்ளனர். இந்த காட்சியை வீடியோ எடுத்து அந்த தம்பதி இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த பாம்பு சாக்கடை நீர் செல்லும் வடிகால் வழியாக வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi