Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடுகர்ப்பிணிகளுக்குக் கொரோனா தடுப்பூசி; நாளை தீர்மானம்

கர்ப்பிணிகளுக்குக் கொரோனா தடுப்பூசி; நாளை தீர்மானம்

கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதுத் தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும், ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இது தொடர்பான அறிவிப்பு நாளை (10) வெளியாகுமெனவும் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்களுக்குப் பொறுத்தமான தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நிபுணர்களின் குழுவின் கவனத்துக்கும் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை சுகாதார அமைச்சு அடுத்த வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே, அவர்களுக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டுமென்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi