இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம் ‘ரெஸ்பிரோன் நனோ ஏவி99’ எனும் உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் ஒன்றினை வடிவமைத்துள்ளது
கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க பேராதெனிய பல்கலைக்கழகம் தயாரித்த ‘ரெஸ்பிரோன் நனோ ஏவி99’ முகக்கவசம் நேற்று (03) கண்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த வைரஸை அழிக்கும் முகக் கவசத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு தூதுவராலயங்களூடாக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளன
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.