Sun, May9, 2021
Homeதலைப்பு செய்திகஞ்சா கடத்தலால் யாழில் கொரோனா அபாயம்; 24 மணி நேரத்தில் 313 கிலோ மீட்பு

கஞ்சா கடத்தலால் யாழில் கொரோனா அபாயம்; 24 மணி நேரத்தில் 313 கிலோ மீட்பு

வடமராட்சி கடற்பரப்பில் தொடரும் சட்டவிரோத கடல் நடவடிக்கை மூலம் இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில், யாழ். குடாநாட்டிற்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா போதைப்பொருளை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த நாட்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று (04) அதிகாலை 1 மணியளவில் 91 கிலோகிராம் கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ‘ரோசா’ ரக மினி பஸ்ஸின் சாரதியும் கைது செய்யப்பட்ட நிலையில், படகில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதேவேளை, யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 313 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi