Homeசெய்திகள்கிழக்குஓட்டமாவடியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; பாம்பு தீண்டியிருக்கலாமென சந்தேகம்

ஓட்டமாவடியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; பாம்பு தீண்டியிருக்கலாமென சந்தேகம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மஜ்மா நகர் பகுதியில் 14 வயதுடைய முகம்மது இஸ்மாயில் முகம்மது பிர்னாஸ் எனும் சிறுவன், நேற்று (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இச்சிறுவன், திடீரென சோர்வடைந்த நிலையில் உயிரிழந்துள்ளான். சிறுவனை சிலவேளை பாம்பு தீண்டியிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிப்பதாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சிறுவனின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று (08) மாற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi