Sun, May9, 2021
Homeஇந்தியாஇஸ்ரோ மையத்தில் 350 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

இஸ்ரோ மையத்தில் 350 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் 350 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், ஏப்ரல் மாத மத்தியில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் கொரோனா பரவத் தொடங்கியது.

அப்போது தான் திருப்பதி தொகுதிக்கான எம்.பி. இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது விண்வெளி மைய ஊழியர்கள் தேர்தல் பார்வையாளராக பணியாற்றினர்.

அந்த நேரத்தில் இருந்தே நாள்தோறும் 30 முதல் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒப்பந்தப்பணியாளர்கள் பணிக்கு வரவழைக்கப்படவில்லை. தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் 15 கோவிட் நோயாளிகள் இறந்தனர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi