Mon, Mar1, 2021

இறந்த பெண்ணின் தொடையில் எழுதி இருந்த பெயர்கள்..! விசாரணையில் சிக்கிய கடிதம்..!

கணவனின் கொடுமையாலும் வரதட்சணை கொடுமையாலும் தற்கொலை செய்து கொண்ட பெண் தனது தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என தொடையில் எழுதி வைத்துள்ளார்.

அகமதாபாத்தை சேர்ந்தவர் ஹிதேந்திரா பட்டேல். மருத்துவரான இவர் ஹர்ஷா பட்டேல் (39) என்ற பெண்ணை கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஹர்ஷா பட்டேல் தன் கணவர் வீட்டின் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் ஹர்ஷாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஹர்ஷா அவரது வலது தொடையில் தனது கடைசி வாக்குமூலமாக தன் தற்கொலைக்கு கணவர், மாமியார், மாமனார் தான் காரணம் என எழுதி வைத்துள்ளார்.

மேலும் ஹர்ஷா எழுதிய மிக நீண்ட கடிதமும் பொலிஸார் விசாரணையில் சிக்கியுள்ளது. அதிலும் கணவர் தினமும் மயக்கமருந்து கொடுத்து தன்னை உல்லாசம் அனுபவிப்பதாகவும், மாமியார் மாமனார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆதாரமாக வைத்து ஹர்ஷாவின் கணவர் ஹிதேந்திரா, அவர் பெற்றோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

சிறப்பு செய்திகள்