Mon, Mar1, 2021

இந்தியாவில் முழுமையாக “டிக்-டாக்’ சேவை நிறுத்தம்

கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் தனது சேவையை முழுமையாக நிறுத்திவைப்பதாக முடிவு செய்து அறிவித்துள்ளது “டிக்-டாக்’ செயலி நிறுவனம்.

சீனாவின் டிக்-டாக் செயலி மூலம் பகிரப்படும் காணொலிகளால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, டிக்-டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்காலிகத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அந்த செயலிகளின் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு நிறுவனங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், செயலிகளுக்கான தடை உத்தரவு தொடரும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், டிக்-டாக், ஹலோ ஆகிய செயலிகளின் சேவையை இந்தியாவில் முழுமையாக நிறுத்திவைப்பதாக முடிவு செய்து அறிவித்துள்ளது சீனாவின் “பைடெடன்ஸ்’ சமூக ஊடக நிறுவனம்.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இடைக்காலத் தலைவர் வனேஸா பப்பாஸ், வணிகத் தீர்வுகளுக்கான துணைத் தலைவர் பிளேக் சாண்ட்லி ஆகியோர், இந்தியாவில் உள்ள அந்நிறுவன ஊழியர்களுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சல் தகவலில் அவர்கள் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, டிக்-டாக், ஹலோ ஆகிய செயலிகளின் சேவை இந்தியாவில் முழுமையாக நிறுத்தப்படுகிறது.

இதனால் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நாங்கள் அறிவோம். இந்தியாவில் மீண்டும் எப்போது சேவையைத் தொடங்குவோம் என்பது குறித்து தற்போது உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், மீண்டும் சேவையைத் தொடங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று மின்னஞ்சல் தகவலில் கூறப்பட்டுள்ளது.

Seithi News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது செய்தி ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Seithi Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

Tamil News from Seithi Tamil
Tamil Nadu News in TamilBusiness News in Tamil | Sri Lanka News in Tamil | World News in Tamil | cinema News in Tamil | Sports News in Tamil | Astrology in Tamil

 

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

சிறப்பு செய்திகள்