உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 133,030,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 2,886,114 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 107,268,888 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 630 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,92,135 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.