Sun, May9, 2021
Homeசெய்திகள்கிழக்குஆற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் மரணம்

ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் மரணம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் நகர் பகுதியில் உள்ள முதலைமடு ஆற்றில் மூழ்கி என்.முஹமட் நதீப் எனும் 16 வயது சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

க.பொ.த சாதாரண தர மாணவன் நதீப் , அவரது நண்பர்களுடன் நேற்று (03) மாலை முதலைமடு ஆற்றுக்கு குளிக்கச் சென்றவேளை நீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் அவர்  காப்பாற்றப்பட்டு, மூதூர் வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.வை.எம்.லாபிர் தெரிவித்தார்.

மாணவனின் உடலை மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் குடும்பத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, மேற்படி குளத்தில் குளிப்பதைத் தடை விதிக்க வேண்டுமென, பிரதேச சபைத் தவிசாளரிடம் வேண்டுகோளையும் மரண விசாரணை அதிகாரி முன்வைத்துள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi