Mon, Apr19, 2021
Homeசினிமாஅழுகையா வருது! வேதனையில் குக் வித் கோமாளி புகழ்! என்னாச்சு தெரியுமா?
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

அழுகையா வருது! வேதனையில் குக் வித் கோமாளி புகழ்! என்னாச்சு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மக்களால் பெருமளவில் ரசித்து பார்க்கப்படுகிறது.

இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா ஆகியோர் இறுதி நிலைக்கு தகுதியாகியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வந்து ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா, சரத் ஆகியோர் பெரும் ரகளைகள் செய்து வந்தனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களால் பெருமளவில் கவரப்பட்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் புகழ்.

இந்நிகழ்ச்சி இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

செம ஜாலியாக , அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் புகழ் மிகவும் உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், மிஸ் யூ சோ மச் மக்களே. எனது குக் வித் கோமாளி டீம், ரொம்ப கஷ்டமா இருக்கு. அழுகையா வருது என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.