Sun, May9, 2021
Homeசினிமாஅரசியல் நய்யாண்டியுடன் பட்டையை கிளப்பும் மண்டேலா டீசர்!

அரசியல் நய்யாண்டியுடன் பட்டையை கிளப்பும் மண்டேலா டீசர்!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள மண்டேலா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ள நிலையில், ஏகப்பட்ட அரசியல் நய்யாண்டியுடன் இந்த டீசர் வெளியாகி இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் மக்கள் புரட்சியை ஏற்படுத்திய தலைவர் நெல்சன் மண்டேலாவின் பெயரில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஏகப்பட்ட படங்களின் டீசர்கள் மற்றும் டிரைலர்களை வெளியிட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் யோகி பாபுவின் மண்டேலா டீசரையும் தற்போது தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த படத்துலயும் எப்பவும் போல கலக்குங்க என யோகி பாபுவை வாழ்த்தி உள்ளார்.

நகைச்சுவை படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் அரசியல் காமெடிகள் அதிகளவில் உள்ளன. இந்த தருணத்தில் படமே வெளியானாலும் சிறப்பாகத் தான் இருக்கும்.

தேர்தலை முன்னிட்டு கட்சிக்காரர்கள் 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது போல காட்சியை இயக்குநர் வைத்து ரணகளப்படுத்தி உள்ளார்.

 

அவன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தா நாம 50 ரூபாய் டோக்கன் கொடுப்போம் என அரசியல் பேசும் வசனமும் சிறப்பாக அமைந்துள்ளது.

வெளியூர் ஆட்களை தேர்தல் சமையத்தில் அழைத்து வருவது, வெளிநாட்டு காரர்களை அழைத்து வருவது என ரகளை கிளப்பும் டீசர்.

நெல்சன் மண்டேலாவாக முடி திருத்தும் நபராக வரும் யோகி பாபு நோட்டாவை ஒரு கட்சியென நினைத்துக் கொண்டு நோட்டாவுக்கும் காசு கொடுத்தா தான் ஓட்டு என அதகளம் பண்ணி உள்ள டீசரை நீங்களே பாருங்க!

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi