Sun, May9, 2021
Homeவெளிநாடுஅமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்

அமெரிக்காவின் 39-வது ஜனாதிபதியாக பதவிவகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட்டார்.

இந்த காலகட்டத்தில் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 42-வது துணை ஜனாதிபதியாக செயல்பட்டவர் வால்டர் மண்டிலி.

மேலும், பில் கிளிங்டன் ஜனாதிபதியாக இருந்தபோது 1993 முதல் 1996 வரை வால்டர் மண்டிலி ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டுள்ளார்.

வயது முதிர்வு காரணமாக அவர் அரசியலை விட்டு கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தார்.

இந்நிலையில், 93 வயதான வால்டர் மண்டிலி இன்று உயிரிழந்தார். வால்டர் மண்டிலி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.

முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு அவருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், வால்டர் மண்டிலி மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi