Sun, May9, 2021
Homeவெளிநாடுஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. காவல்துறையினரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள வணிக வளாகம் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சொந்த பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருப்பது போல தெரிகிறது எனவும், இதனால் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் குடியிருப்பு வாசிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள டெலிவரி நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

Texas Shooting , டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi