Sun, May9, 2021
Homeவிநோதம்அணிலுக்கு தாகம் தீர தண்ணீர் கொடுத்த நபர்! நெகிழ வைத்த வீடியோ

அணிலுக்கு தாகம் தீர தண்ணீர் கொடுத்த நபர்! நெகிழ வைத்த வீடியோ

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ட்விட்டரில் எப்போதும் வன விலங்குகளின் அன்பு பரிமாற்றம், அவற்றின் வாழ்விடம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகியுள்ளது.

அதில் அணில் ஒன்று தாகத்தால் தவித்த படி வெயிலில் இளைஞர் ஒருவரை நோக்கி வர அதற்கு பிளாஸ்டிக் பாட்டிலில் இளைஞர் தண்ணீர் அளித்து அணிலின் தாகம் தீர்த்துள்ளார்.

இறுதியாக தாகம் தீர்த்த அணில் இளைஞரின் கையில் அமர்ந்து நீர் அருந்தி விட்டு அவரை பார்த்த படி நன்றி தெரிவிக்கும் வகையில் செய்த செயல் இணையத்தில் பலரின் மனங்களை வென்றுள்ளது.

பின்னர் மீண்டும் நீர் அருந்தி தனது தாகம் முழுமையும் தீர்த்துக் கொண்டது. தற்போது இந்த வீடியோ காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi