Sun, May9, 2021
Homeவெளிநாடுஅடைக்கப்பட்ட இடங்களில் சிங்கங்களின் இனப்பெருக்கத்தைத் தடை செய்யத் திட்டம்

அடைக்கப்பட்ட இடங்களில் சிங்கங்களின் இனப்பெருக்கத்தைத் தடை செய்யத் திட்டம்

கூண்டுகளில் அல்லது வேலியால் அடைக்கப்பட்ட இடங்களில் சிங்கங்களின் இனப்பெருக்கத்தைத் தடை செய்வதற்கான திட்டங்களைத் தென்னாப்பிரிக்கா வெளியிட்டுள்ளது.

அந்த விலங்களுக்கு இயற்கையான சூழலை வழங்கும் முயற்சியில், அவ்வாறு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அடைத்து வைக்கப்பட்ட சிங்கங்களை வேட்டையாடவோ சுற்றுப்பயணிகள் அவற்றைச் செல்லமாக வருடவோ இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு நடத்திய ஆய்வில் வெளியிடப்பட்ட பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கம், யானை, காண்டாமிருகம், சிறுத்தை போன்ற விலங்குகளின் வேட்டை, வர்த்தகம் குறித்த விதிகளை அந்தக் குழு ஆய்வு செய்திருந்தது.

இந்த நிலையில், சிங்கங்களை அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வதையும் வளர்ப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆய்வறிக்கை கூறியதாக அந்நாட்டின் சுற்றுப்புற அமைச்சர் தெரிவித்துள்ளார்.