Mon, Mar1, 2021

அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் நாடாளுமன்றம் கூடவுள்ளது

நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க இதனை கூறியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதி குறித்த விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி, முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 10 மணிமுதல் 11.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றம் முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு மாத்திரம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டாரவின் மறைவு தொடர்பான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினா நேரம் ஒதுக்கப்படாது என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

சிறப்பு செய்திகள்