Sun, May9, 2021
Homeஇந்தியாஅசுர வேகத்தில் தமிழகத்தில் பரவுகிறது கொரோனா! ஒரேநாளில் 20,768 பேருக்கு தொற்று

அசுர வேகத்தில் தமிழகத்தில் பரவுகிறது கொரோனா! ஒரேநாளில் 20,768 பேருக்கு தொற்று

தமிழகத்தில் மேலும் 20,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,07,112 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் மேலும் 20,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,07,112 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 17,576 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 10,72,322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 153 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,346 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 72 பேரும், தனியார் மருத்துவமனையில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 6,078 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,45,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi